/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வீஸ் ரோட்டில் தேங்கிய கழிவுநீர்
/
சர்வீஸ் ரோட்டில் தேங்கிய கழிவுநீர்
ADDED : அக் 08, 2025 10:27 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் கழிவுநீர் தேக்கமடைந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகாமையில் உள்ள தனியார் வணிக வளாகம் முன் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும், கடை வைத்திருப்பவர்கள், பேங்க் செல்பவர்கள் சிரமப்பட்டனர்.
இவ்வழியாக நடந்து செல்பவர்கள், ரோட்டில் வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் தெறிக்குமோ என அச்சத்துடன் செல்கின்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
சர்வீஸ் ரோட்டோரம் உள்ள வணிக வளாகம் அருகே, சிறிய கால்வாய் உள்ளது. இதன் அருகாமையில் தனியார் சார்பில் போர்வெல் அமைக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய நீர், கழிவுநீருடன் கலந்து ரோட்டில் தேங்கியுள்ளது.
பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள சிறிய கால்வாயை, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோட்டோரம் உள்ள கால்வாயில் இணைப்பது குறித்து அனுமதி கேட்டதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். அனுமதி வழங்கினால் இது போன்று பிரச்னை ஏற்படாது.
இவ்வாறு, கூறினர்.