/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படகு இல்லத்தில் கழிவு தேக்கம்: சுத்தப்படுத்துகிறது நகராட்சி
/
படகு இல்லத்தில் கழிவு தேக்கம்: சுத்தப்படுத்துகிறது நகராட்சி
படகு இல்லத்தில் கழிவு தேக்கம்: சுத்தப்படுத்துகிறது நகராட்சி
படகு இல்லத்தில் கழிவு தேக்கம்: சுத்தப்படுத்துகிறது நகராட்சி
ADDED : செப் 20, 2024 10:10 PM

வால்பாறை : வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, நகராட்சி சார்பில் படகுசவாரி துவங்கப்பட்டுள்ளது. படகு சவாரி செல்ல, 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், படகுஇல்லத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை தேங்கியுள்ளது. இதனால் கழிவு நீரில் படகு சவாரி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், படகுஇல்லத்தில் தேங்கியுள்ள குப்பை உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, நகராட்சி கமிஷனர் விநாயகம் உத்தரவின் பேரில், படகுஇல்லத்தில் தேங்கி கிடந்த குப்பை உள்ளிட்ட கழிவுகளை, நகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை நகரில், ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வெளியாகும் கழிவு நீரை ஆற்றில் விடக்கூடாது. தேவையில்லாமல் குப்பையை ஆற்றில் வீசுவதை தவிர்த்து, துாய்மை பணியாளர்கள் வரும் போது, நேரடியாக வழங்க வேண்டும். படகுஇல்லத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாசுபடாமல் இருக்க, பொதுமக்கள் நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.