/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேற்றம்
/
ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேற்றம்
ADDED : நவ 13, 2024 06:23 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்டம், 170 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டது. திட்டம் துவங்கப்பட்டது முதல், இதுவரை பிரச்னை ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டில் தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால், இப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் சிரமப்படுகின்றனர். நடந்து செல்வோர், வாகன ஓட்டுநர்கள், முகம் சுளித்தபடியே செல்லும் சூழல் உள்ளது.
நகராட்சி அலுவலகம் அருகே இந்த நிலைமை என்றால், குடியிருப்பு பகுதிகளில் இன்னும் மோசமாக இருக்கும். எனவே, அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

