குழாயில் நுழைந்தது வேர் தேங்கி நிற்கிறது கழிவுநீர்
குழாயில் நுழைந்தது வேர் தேங்கி நிற்கிறது கழிவுநீர்
ADDED : செப் 15, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
கோவை: காட்டூர் வி.என்.தோட்டம், பட்டேல் ரோட்டில் நிலத்தடி கழிவுநீர்க் குழாய்களில் மர வேர்கள் ஊடுருவியதால், கழிவுநீர் செல்ல வழியின்றி நடைபாதையில் தேங்கி வருகிறது.
நீண்ட நாட்களாக நடைபாதை சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குழாய்களை அடைத்துள்ள மர வேர்களை அகற்றி, கழிவுநீர் குழாய் அமைப்பை சீரமைத்து, சேதமடைந்த நடைபாதையை புதுப்பிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாமில், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
