sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மீண்டும் வீட்டுக்குள் வருகிறது சாக்கடை கழிவுநீர்; வேலாண்டிபாளையத்தில் மக்கள் வேதனை

/

மீண்டும் வீட்டுக்குள் வருகிறது சாக்கடை கழிவுநீர்; வேலாண்டிபாளையத்தில் மக்கள் வேதனை

மீண்டும் வீட்டுக்குள் வருகிறது சாக்கடை கழிவுநீர்; வேலாண்டிபாளையத்தில் மக்கள் வேதனை

மீண்டும் வீட்டுக்குள் வருகிறது சாக்கடை கழிவுநீர்; வேலாண்டிபாளையத்தில் மக்கள் வேதனை


ADDED : ஜன 28, 2025 07:49 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கணும்


வெரைட்டிஹால் ரோடு, அய்யண்ண கவுடர் வீதியில், புளிய மரம் அருகில் உள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இந்நிலத்தை மீட்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரேம், அய்யண்ண கவுடர் வீதி.

வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு


வீரியம்பாளையம் ரோடு, நேரு நகர் மேற்கு பகுதியில், மாருதி பேக்கரி பகுதியில், சாலையோரம் குழாய் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து பல நாட்களாகியும், குழியை மூடவில்லை. பாதி சாலை வரை மண் குவிந்ததால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

- செந்தில், வீரியம்பாளையம்.

பாலத்தில் முளைத்த மரங்கள்


ஒண்டிப்புதுார் மேம்பாலத்தில் இருபுறமும், பாலத்தின் விரிசல்களில் செடிகள் முளைத்துள்ளன. இதனால் விரிசல்கள் பெரிதாகின்றன. பாலம் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. பாலத்தின் பல்வேறு இடங்களில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.

- ஏகாம்பரம், விவேகானந்தா நகர்.

பார்க்கிங் காரால் இடையூறு


தடாகம் ரோடு, காந்திபார்க் பகுதியில், தண்டு மாரியம்மன் கோவில் முன்புறம் நீண்ட நாட்களாக, சாலையோரம் ஒரு கார் நிறுத்தப்பட்டுள்ளது. பாதசாரிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள, இந்த காரை அப்புறப்படுத்த வேண்டும்.

- ராஜேஷ், பொன்னையராஜாபுரம்.

அடிக்கடி விபத்து


பூசாரிபாளையம் பகுதியில், புதிய சாலை அமைக்கப்பட்டு சில நாட்களிலேயே பாதாள சாக்கடை இணைப்புக்காக, ஒன்பது இடங்களில் குழி தோண்டப்பட்டது. இதனால், சேதமடைந்த சாலையை, கான்கிரீட் கொண்டு தரமற்றமுறையில் சீரமைத்துள்ளனர். தரமற்ற சாலையால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது.

- உன்னிகிருஷ்ணன், பூசாரிபாளையம்.

பல்லாங்குழியாய் சாலை


அவிநாசி ரோடு, பீளமேடு, ஜி.ஆர்.ஜி., பள்ளி எதிரே சாஸ்திரி வீதி குறுக்கு ரோடுமுழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. பெரிய, பெரிய பள்ளங்களால் விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

- பாரதிதாசன், பீளமேடு.

கடும் துர்நாற்றம்


பி.என்.புதுார், சாஸ்திரி வீதி, 74வது வார்டு, இரண்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் பல இடங்களில் உடைந்துள்ளது. சுற்றுச்சுவர் உடைந்து கால்வாயினுள் விழுகிறது. இதனால், ஆங்காங்கே கால்வாய் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதியில், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- குணசேகரன், பி.என்.,புதுார்.

வீடுகளுக்குள் பாயும் கழிவுநீர்


வேலாண்டிபாளையம், தடாகம் ரோடு பகுதியில், பாதாள சாக்கடை அடைபட்டுள்ளது. இதனால், விநாயகர் கோவில் வீதியில், சாக்கடை நீர் மீண்டும் வீடுகளுக்குள் திரும்ப வருகிறது. சுகாதாரமற்ற சூழலால், நோய் பரவும் அபாயம் உள்ளது. போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- ஜென்சி, விநாயகர் கோவில் வீதி.

செவிசாய்க்காத அதிகாரிகள்


ஒண்டிப்புதுார், 57வது வார்டு, சாலை விரிவாக்க பணியின் போது குழாய்கள் சேதமடைந்துவிட்டது. பலமுறை புகார் செய்தும், குழாயை சரிசெய்யவில்லை. சாலையின் ஒருபுறமும் குழியாக உள்ளது. குறுகலான சாலையில் வாகனங்களை இயக்குவதே, மிகவும் சிரமமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கையில்லை.

- அக்சயா, ஒண்டிப்புதுார்.

சுகாதார சீர்கேடு


கே.கே.புதுார், 43வது வார்டு, நாச்சிமுத்து லே-அவுட் கிராஸ் ஒன்றில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. குடியிருப்புக்கு நடுவே உள்ள இங்கு, புதர் அடர்ந்து வளர்ந்துள்ளது. இப்பகுதியில் குப்பையும் கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றம், கொசுத்தொல்லைஎன சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

- சந்தோஷ், கே.கே.புதுார்.






      Dinamalar
      Follow us