sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாக்கடையில் கலக்கிறது சிறுவாணி குடிநீர் 42வது வார்டில் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?

/

சாக்கடையில் கலக்கிறது சிறுவாணி குடிநீர் 42வது வார்டில் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?

சாக்கடையில் கலக்கிறது சிறுவாணி குடிநீர் 42வது வார்டில் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?

சாக்கடையில் கலக்கிறது சிறுவாணி குடிநீர் 42வது வார்டில் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?


ADDED : பிப் 20, 2024 05:50 AM

Google News

ADDED : பிப் 20, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பை நிறைந்த பூங்கா


கணபதி, ராஜா நகரில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பூங்கா முழுவதும் குப்பை நிரம்பியுள்ளது. பூங்காவிலுள்ள செடிகள், மரங்கள் போதிய தண்ணீரின்றி, வாடிய நிலையில் உள்ளது.

- பாலகிருஷ்ணன், கணபதி.

டெங்கு பரவ வாய்ப்பு


தெலுங்குபாளையம் பிரிவு, கலைஞர் நகரில், சாக்கடை கால்வாய் பல வாரங்களாக சுத்தம் செய்யவில்லை. கால்வாய்களில் சாக்கடை நீர் நிரம்பி வழிகிறது. கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால், டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

- கிருஷ்ணன், கலைஞர்நகர்.

ரோட்டில் பாதி மண்


ஜி.என்.மில்ஸ் பாலம் அருகே, சர்வீஸ் ரோட்டை தோண்டிய பின், சாலையை சரியாக மூடி, தார் போடவில்லை. பாதி சாலை வரை மண்ணாக இருக்கிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடும் என்பதால், சாலையை சீரமைக்க வேண்டும்.

- மனோகரன், ஜி.என்.,மில்ஸ்.

வீணாகும் குடிநீர்


வேலாண்டிபாளையம், 42வது வார்டு, அண்ணா நகர், நான்காவது வீதியில், குடிநீர் குழாய் உடைந்து, 24 மணி நேரமும் அதிகளவு தண்ணீர் வீணாகிறது. சிறுவாணி குடிநீர் வீணாக, சாக்கடையில் கலக்கிறது. குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

- சுப்பிரமணி, அண்ணாநகர்.

நாறும் வீதி


சிங்காநல்லுார், பேருந்து நிறுத்தம் அருகில், 58வது வார்டு, கமலா குட்டை வீதியில், சக்தி விநாயகர் கோவில் அருகே, சாக்கடை கால்வாய் சரிவர துார்வாருவதில்லை. பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை அடைத்து நிற்கிறது. கால்வாய் முழுவதும் தேங்கி நிற்கும் சாக்கடையால், கடும் துர்நாற்றமும் வீசுகிறது.

- தங்கவேல், சிங்காநல்லுார்.

மூச்சை முட்டும் புகை


வடவள்ளி மெயின்ரோடு, கருப்பராயன் கோவில் அருகே, பாலத்திற்கு அருகில் சிலர் தொடர்ந்து திறந்தவெளியில் குப்பையை கொட்டுகின்றனர். கழிவுகளை வாரம் ஒருமுறை தீ வைத்து எரிக்கின்றனர். இதிலிருந்து வரும் கரும் புகையால், அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுகின்றனர்.

- குமாரசுவாமி, வடவள்ளி.

நோய்த் தொற்று அபாயம்


ஜி.என்.மில்ஸ், 14வது வார்டு, ரயில்வே கேட் அருகே, கிரீன்பீல்ட்ஸ் பள்ளி எதிரே, சாலையோரம் சாக்கடை நீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. இதில், பிளாஸ்டிக் குப்பையும் அதிகளவில் உள்ளது. மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன், ஜி.என்.மில்ஸ்.

பகலிலும் தெருவிளக்கு 'பளிச்'


பைபாஸ் - கள்ளப்பாளையம் ரோட்டில், ஆனைமலையம்மன் நகரில், தெருவிளக்குகள் காலையில் சரியாக 'ஆப்' செய்யப்படுவதிலை. பகலிலும் எரியும் தெருவிளக்குகளால், தினமும் மின்சாரம் வீணாகிறது.

- விவேக், ஒண்டிப்புதுார்.

குப்பை மலை


சவுரிபாளையம் ரோடு, புலியகுளம், பாலசுப்பிரமணியம் நகர், சாலையோரம் மலைபோல குப்பை தேங்கியுள்ளது. கழிவுகள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்றி இங்கு, மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விவேக்குமார், புலியகுளம்.

அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு


வெள்ளக்கிணறு, இரண்டாவது வார்டு, அம்பேத்கர் தெருவில், கடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக சாக்கடை துார்வாரவில்லை. கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

- குமாரவேல், வெள்ளக்கிணறு.

தெருவிளக்கு வேண்டும்


விளாங்குறிச்சி, 22வது வார்டு, சேரன்மாநகர், சோனா ஸ்டோர் அருகேவுள்ள, ' பி -9, பி -18' என்ற எண் கொண்ட கம்பத்தில், தெருவிளக்கு பொருத்தவில்லை. இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்களுக்கு, போதிய பாதுகாப்பில்லை.

- ஜெயராமன், சேரன்மாநகர்.

இருளால் தொடரும் அச்சம்


பீளமேடு, 24வது வார்டு, சாஸ்திரி வீதியில், கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. குற்றச் சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.

- செல்வநராயணன், பீளமேடு.






      Dinamalar
      Follow us