/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாய்க்கால்கள் துார் வாரும் பணி... இருக்கு ஆனா இல்லை!கழிவுகளால் நிரம்பி வழியும் அவலம்
/
வாய்க்கால்கள் துார் வாரும் பணி... இருக்கு ஆனா இல்லை!கழிவுகளால் நிரம்பி வழியும் அவலம்
வாய்க்கால்கள் துார் வாரும் பணி... இருக்கு ஆனா இல்லை!கழிவுகளால் நிரம்பி வழியும் அவலம்
வாய்க்கால்கள் துார் வாரும் பணி... இருக்கு ஆனா இல்லை!கழிவுகளால் நிரம்பி வழியும் அவலம்
ADDED : ஜூன் 17, 2024 12:58 AM

கோவை;வாய்க்கால்கள் துார்வாரப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் கூறி வரும் நிலையில், நகரின் பல்வேறு கால்வாய்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்துள்ளது.
கோவையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில், ஒன்பது குளங்கள் உள்ளன. குளங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பல்வேறு வாய்க்கால்கள் வழியாக வந்து சேர்கின்றன.
இவ்வாய்க்கால்கள், ஆக்கிரமிப்பு, கழிவுகள் தேக்கம், துார்வாரத காரணத்தால் மழைநீர் குளங்களுக்கு முறையாக வராமல், வாய்க்கால்கள் உடைந்து குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது.
கோவையில் உள்ள குளங்கள் பலவும் கழிவு நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதைமாற்றி மழைநீரை சேமிக்க குளங்களை தயார்படுத்த வேண்டும் எனக்கோரிக்கை விடுக் கப்பட்டது.
இதையடுத்து குளங்களை துார்வாரவும், வாய்க்கால்களை துார்வாரவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
ஓரளவுக்கு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சங்கனுார் ஓடை உள்ளிட்ட ஒரு சில ஓடைகள் கழிவுகள் அகற்றப்பட்டு, நீர் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், நகரின் பிரதான பகுதிகளில் இருக்கும் பல வாய்கால்கள் துார்வாரப்படாமல் பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகள் நிறைந்தே காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக, கோவை கணபதி அருகே உள்ள சங்கனுார் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கழிவுநீர் சங்கமித்துள்ளது. இதேபோல் பல்வேறு ஓடைகளும் துார்வாரப்படாமல், உள்ளன. மாநகராட்சியில், 133.10 கி.மீ., நீளம் வாய்க்கால்கள் உள்ளன. இதுவரை, 68 கி.மீ., நீள வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவிக்கிறது. ஆனால், வாய்க்கால்களை பார்த்தால் அப்படி எந்த பணியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் முன், வாய்க்கால்களை துார்வார கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறுகையில்,''வாய்க்கால் துார்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
''தொடர்ந்து பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பணிகள் அனைத்தையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.