/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
/
சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
ADDED : பிப் 17, 2025 10:50 PM

வால்பாறை; சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை, மளுக்கப்பாறை எஸ்டேட் 2 வது டிவிஷனில் உள்ள, சக்தி மாரியம்மன் கோவிலின், 48ம் ஆண்டு திருவிழா, கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.
காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாலை, 4:00 மணிக்கு பக்தர்கள பூவோடு எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
நள்ளிரவு, 12:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

