/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்திதேவி அறக்கட்டளை ஐம்பெரும் விழா
/
சக்திதேவி அறக்கட்டளை ஐம்பெரும் விழா
ADDED : டிச 27, 2025 05:11 AM

கோவை: சக்தி மசாலா நிறுவனங்களின் அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் 26வது ஐம்பெரும் விழா ஈரோடு, சக்தி துரைசாமி திருமண மாளிகையில் நடந்தது. சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி, சாந்தி ஆகியோர் தலைமை வகித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாட்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வனம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் சுந்தரராஜ் சுற்றுச்சூழல் துறையில் சாதனைகள் பல புரிந்தமைக்காக சக்திதேவி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்தார். சக்தி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார். சக்திதேவி அறக்கட்டளையின் ஆண்டு மலரையும் வெளியிட்டார்.
விழாவில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு 1.49 கோடி ரூபாய் மதிப்புடைய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற மாநில நிதிக்குழுவின் தலைவர் அலாவுதீன, சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன், திண்டல் பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், சரோஜா சுந்தரராஜ் மற்றும் செந்தில்குமார், தீபா, இளங்கோ, வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகத்தினர் சரோஜா உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

