/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஷீரடி-கோவை விமான சேவை வரும் 30ம் தேதி துவங்குகிறது
/
ஷீரடி-கோவை விமான சேவை வரும் 30ம் தேதி துவங்குகிறது
ஷீரடி-கோவை விமான சேவை வரும் 30ம் தேதி துவங்குகிறது
ஷீரடி-கோவை விமான சேவை வரும் 30ம் தேதி துவங்குகிறது
ADDED : நவ 18, 2024 10:54 PM
கோவை; கோவையில் இருந்து ஷீரடிக்குத் துவங்கப்பட்ட விமான சேவைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால், ஷீரடியில் இருந்து கோவைக்கு விமான சேவை வரும் 30ம் தேதி முதல் துவங்கவுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 30 விமான சேவைகளும், சில நாட்களில் 32 சேவைகளும் வழங்கப்படுகின்றன.
கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் தினசரி சராசரி 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.கடந்த அக்., 27ம் தேதி, இண்டிகோ நிறுவனம் சார்பில், கோவையில் இருந்து சென்னை வழியாக ஷீரடிக்கு விமான சேவை துவங்கப்பட்டது. இவ்வழித்தடத்தில், 186 பேர் பயணிக்கும் 'ஏர்பஸ் 320' இயக்கப்படுகிறது. ஒரு நிறுத்தமாக சென்னையில் நின்று செல்லும் இந்த விமானத்துக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இதையடுத்து, மறுமார்க்கத்தில், ஷீரடியில் இருந்து சென்னை வழியாக கோவைக்கு, வரும் 30ம் தேதி முதல் விமான சேவை துவக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து கோவை வரும் பயணிகளும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

