/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூங்காவுக்காக மரங்களை வெட்டிய கோவை மாநகராட்சியால் அதிர்ச்சி
/
பூங்காவுக்காக மரங்களை வெட்டிய கோவை மாநகராட்சியால் அதிர்ச்சி
பூங்காவுக்காக மரங்களை வெட்டிய கோவை மாநகராட்சியால் அதிர்ச்சி
பூங்காவுக்காக மரங்களை வெட்டிய கோவை மாநகராட்சியால் அதிர்ச்சி
ADDED : மே 18, 2025 04:43 AM

கோவை: கோவை, காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில், 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா உருவாக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
இவ்வளாகத்தின் ஒரு பகுதியில் நன்கு வளர்ந்திருந்த, 70 தென்னை மரங்கள் மற்றும் புளிய மரங்கள் நேற்று, அறுவை மிஷின்களை பயன்படுத்தி வெட்டப்பட்டன.
மத்திய சிறை கைதிகளால் நடப்பட்டு, பசுமையாக வளர்க்கப்பட்டிருந்த அம்மரங்கள், அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. மரங்கள் வெட்டும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
நன்கு வளர்ந்து, நிழல் தந்து கொண்டிருக்கும் மரங்களை வெட்டி, பூங்கா உருவாக்குவது தவறானது என, பசுமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
வெட்டப்பட்டவை அனைத்தும் பச்சை மரங்கள். ஆனால், பட்டுப்போன மரங்கள் என மாநகராட்சியால் கடிதம் வழங்கப்பட்டு, வனத்துறையால் மதிப்பிடப்பட்டு, மாவட்ட பசுமை கமிட்டியில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
செம்மொழி பூங்கா என்பது அரசின் சிறப்பு திட்டம் என்பதற்காக, பச்சை மரங்களை வெட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி அளிப்பது, தவறான செயல். பூங்கா உருவாக்குகிறோம் என்கிற பெயரில், அங்குள்ள மரங்களை வெட்டுவது முரணாக உள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, மறுநடவு செய்யப்பட்டுள்ளன. 63 மரங்கள் பட்டுப்போயிருந்தன.
அவற்றை வெட்ட, மாவட்ட பசுமை கமிட்டி ஒப்புதல் வழங்கியது. வனத்துறையினர் ஆய்வு செய்து, மதிப்பீடு செய்துள்ளனர். பச்சை மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரிக்கிறேன்,'' என்றார்.