/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு 'ஷூ'
/
அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு 'ஷூ'
ADDED : டிச 06, 2024 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, நெ.10 முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 'ஷூ' வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட, நெ.10 முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 100 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும், சிறகுகள் அறக்கட்டளை சார்பில் 'ஷூ' வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் நர்மதா, ஊராட்சித் தலைவர் சதீஷ்குமார், சிறகுகள் அறக்கட்டளை நிர்வாகி ஆனந்த், ஆசிரியர்கள், மாணவர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.