sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு வாங்க; விரும்பியதை வாங்குங்க! கண்காட்சி இன்று நிறைவடைகிறது; 'மிஸ்' பண்ணிடாதீங்க

/

'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு வாங்க; விரும்பியதை வாங்குங்க! கண்காட்சி இன்று நிறைவடைகிறது; 'மிஸ்' பண்ணிடாதீங்க

'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு வாங்க; விரும்பியதை வாங்குங்க! கண்காட்சி இன்று நிறைவடைகிறது; 'மிஸ்' பண்ணிடாதீங்க

'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு வாங்க; விரும்பியதை வாங்குங்க! கண்காட்சி இன்று நிறைவடைகிறது; 'மிஸ்' பண்ணிடாதீங்க


ADDED : ஆக 18, 2025 01:25 AM

Google News

ADDED : ஆக 18, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

கோவை, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நடந்து வரும், 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும். தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கு சிறந்த இடமாக இருக்கிறது; அதற்கான வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.

கோவையின் நம்பர் ஒன் நாளிதழான 'தினமலர்' மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், 'ஏ', 'பி' மற்றும், 'சி' ஹாலில், 15ம் தேதி துவங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தேவையான பொருட்களை வாங்கும் வகையில், 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குடும்பம் குடும்பமாக மக்கள் சாரை சாரையாக வந்து, ஸ்டால்களை பொறுமையாக பார்வையிட்டு, வாங்கிச் செல்கின்றனர். கண்காட்சிக்கு வருவோருக்காக சலுகை விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில அரங்குகளில் சதவீத அடிப்படையில் ஆபர் அளிக்கப்படுகிறது. இத்தனை நாட்களாக வாங்க நினைத்து காத்திருந்த பொருட்களை வாங்கி மகிழலாம்.

பொருட்களை அள்ளலாம்

பாத்திரங்கள், ஆப்பச்சட்டி, பணியாரக்கல், 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், பிரிஜ், வாஷிங்மெஷின், ஏ.சி., சிம்னி அடுப்புகள், ஜூஸ் மேக்கர், மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வகையான பொருட்களை பெண்கள் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். வீட்டு வரவேற்பறையை அழகுபடுத்த சோபா ரகங்களை பார்வையிட்டு 'ஆர்டர்' கொடுத்தனர். இவை தவிர, கட்டில், மெத்தை, ஊஞ்சல், தலையணை, டிராவல் படுக்கை விரிப்பு என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

பெண்களுக்கு பேன்ஸி நகைகள், அழகுசாதனப் பொருட்கள், விதவிதமான பேக்குகள், செப்பல்கள், ஜவுளி ரகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொம்மைகள், அறிவுக்கு தீனி போடும் விளையாட்டு பொருட்கள் என ஒவ்வொரு அரங்காக பார்த்து, வாங்கிச் செல்கின்றனர். வீடு, மனை வாங்குவதற்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் வாங்கலாம்.

குட்டீஸ் விளையாட்டு

குழந்தைகளை மகிழ்விக்க 'கேம் ஜோன்' இருக்கிறது. படகு சவாரி, பைக் ஓட்டுவது, காளையை அடக்குவது, வாட்டர் பலுான் ரோலிங், ஒட்டக சவாரி என விளையாட்டுகள் இருக்கின்றன. மூன்று அரங்குகளையும் சுற்றி வருவதற்குள் களைப்பு ஏற்படும். வயிறார சாப்பிட உணவுத் திருவிழாவும் இருக்கிறது. சைவம், அசைவம் என இரு விதமான உணவுகளும் கிடைக்கும். பெண்களுக்கு இலவசமாக மெகந்தி போடப்படுகிறது. மண் பாண்டம் செய்வது எப்படி என குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிறது; அவர்கள் செய்யும் மண் பாண்டத்தை வீட்டுக்கு பத்திரமாக எடுத்துச் செல்லலாம்.

இணைந்த கரங்கள்!

'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை, அல்ட்ரா நிறுவனம், கோவை லட்சுமி, 'வுட் ஸ்பார்க்', 'நியூ மென்ஸ்', 'ஆல்பா' பர்னிச்சர் மற்றும் ஜி ஸ்கொயர் ஆகிய நிறுவனங்கள் 'கோ--ஸ்பான்சர்'களாக கரம் கோர்த்துள்ளன. இந்நிறுவனங்களின் ஸ்டால்களில் ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

'மிஸ்' பண்ணிடாதீங்க

கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை தேவையானவற்றை தேர்வு செய்து வாங்க வாய்ப்பு இருக்கிறது; தவற விட்டு விடாதீர்கள். இன்றைய தினம் 'மிஸ்' செய்தால், ஓராண்டு காத்திருக்க வேண்டும். மாலை நேர பரபரப்பை தவிர்க்க, காலையிலேயே குடும்பத்தோடு வந்து, தேவையானதை அள்ளிச் செல்லுங்கள்; அந்தளவுக்கு ஆபர் விலையில் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன!

'தினமலர்' சந்தாவுக்கு

ஒன்றல்ல... மூன்று பலன்

'தினமலர்' நாளிதழ் சப்ளை செய்ய ஆண்டு சந்தா ரூ.1,999 மட்டுமே. இதற்கு ஆச்சரியமூட்டும் பரிசுகளும் உண்டு. தனி நபர் காப்பீடு ரூ.5 லட்சம், விபத்து காப்பீடு ரூ.1 லட்சம், வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு ரூ.5 லட்சம் என, காப்பீடு பாலிசி வழங்கப்படுகிறது. அல்லது, காற்றுப்புகாத உயர்தர ஜார்கள் பரிசாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது லேப்-டாப் பேக் கிடைக்கும். கண்காட்சியில் சந்தா செலுத்தி, விருப்பத்துக்கேற்ற பரிசை வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us