ADDED : நவ 20, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பெட்டதாபுரம், தண்ணீர் பந்தல் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் அந்தோணி ஜேசுராஜா, 43.
இவர் மளிகை கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்கு சென்று விட்டார். அடுத்த நாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடைக்குள்ளே வைக்கப்பட்டிருந்த, 15,000 ரூபாய் மதிப்பு மளிகை பொருட்கள், ரொக்கம், 18,000 ஆகியவை திருடு போய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்தனர்.இதில் தொடர்புடைய, இடையர்பாளையம் சாமுவேல்,18, சங்கனுார் அப்ரித்கான்,20, தினேஷ் கார்த்திக்,19, ஆகியோரை கைது செய்தனர்.