/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவுக்குள் 'கடையெழு வள்ளல்கள்'
/
செம்மொழி பூங்காவுக்குள் 'கடையெழு வள்ளல்கள்'
ADDED : ஆக 29, 2025 01:40 AM

கோவை; காந்திபுரத்தில், 45 ஏக்கரில் ரூ.167.25 கோடிக்கு செம்மொழி பூங்கா உருவாக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில், 1,000 பேர் அமரும் வகையில் மாநாட்டு மையம் அமைக்கப்படுகிறது.பூங்கா வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த, 4.2 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் உணவகம், குழந்தைகள் பொழுதுபோக்கு இடம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன.
பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், செம்மொழி பூங்காவுக்கு ஏற்கனவே ஒதுக்கிய நிதியை காட்டிலும் கூடுதலாக ரூ.50 கோடி கோரப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கார்டன், லைட்டிங், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. காலியாக உள்ள இடங்களில் மக்களை கவரும் வகையிலான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த கடையெழு வள்ளல்களான பாரி, ஓரி, காரி, நள்ளி, ஆய், பேகன், அதிகன்(அதியமான்) ஆகியோரது சிலைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.