/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய சதுரங்க போட்டி; கந்தசாமி பள்ளி வெற்றி
/
குறுமைய சதுரங்க போட்டி; கந்தசாமி பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 24, 2025 08:32 PM
பொள்ளாச்சி; கோட்டூர் குறுமைய அளவிலான சதுரங்க போட்டியில் கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவி வெற்றி பெற்றார்.
கோட்டூர் குறுமைய அளவிலான, 11 வயதுக்கு உட்பட்ட சதுரங்க விளையாட்டு போட்டி, சேத்துமடை அரசுப்பள்ளியில் நடந்தது. கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நவயுவின்சினி, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.
இதன் வாயிலாக, மாணவி, மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் சண்முகம், செயலர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.