/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய விளையாட்டு போட்டி; மெட்ரோ பள்ளி சாம்பியன்
/
குறுமைய விளையாட்டு போட்டி; மெட்ரோ பள்ளி சாம்பியன்
ADDED : செப் 14, 2025 11:20 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே நடந்த குறுமைய விளையாட்டுப் போட்டியில், மாணவர்கள் பிரிவில், மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதிக புள்ளிகளை எடுத்து, முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டம் பெற்றது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், காரமடை அடுத்த புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 66வது குடியரசு தின, குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மாணவர்கள் பிரிவில் மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 74 வெற்றி புள்ளிகள் எடுத்து, முதலிடத்தை பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
17 வயது பிரிவில் மாணவன் கிஷோர் 400 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர், 400 மீட்டர் ரிலே ஆகிய நான்கு போட்டிகளில் முதலிடம் பெற்றார். இவர் தனிநபர் சாம்பியன் கோப்பையை பெற்றார். 14 வயது பிரிவில் மாணவன் சாணக்கியா, 80 மீட்டர் தடையோட்டத்தில் தங்கப் பதக்கமும், 200 மீட்டர் நீளம் தாண்டுதலில் முதலிடமும் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். ஜோய் அகஸ்டின் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்றார்.
குழு போட்டிகளில், 17 வயது பிரிவில் வாலிபால் முதலிடமும், 19 வயது பிரிவில் ஹேண்ட் பாலில் முதலிடமும், 14 வயது பிரிவில் பால் பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சித்ராம், பள்ளி குழு தலைவர் தியாகராஜன், பொருளாளர் வீராசாமி, பள்ளி முதல்வர் சுலோச்சனா, துணை முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.