/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலில் சுவாமி கும்பிடுவதை தடுப்பதா; கலெக்டரிடம் புகார்
/
கோவிலில் சுவாமி கும்பிடுவதை தடுப்பதா; கலெக்டரிடம் புகார்
கோவிலில் சுவாமி கும்பிடுவதை தடுப்பதா; கலெக்டரிடம் புகார்
கோவிலில் சுவாமி கும்பிடுவதை தடுப்பதா; கலெக்டரிடம் புகார்
ADDED : மார் 20, 2025 05:36 AM
கோவை : டாட்டாபாத்திலுள்ள சவுபாக்கிய சித்தி விநாயகர் கோவிலில், வழிபாடு செய்ய வருவோரை தடுக்க முயற்சிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் அன்னை கஸ்துாரிபா மகளிர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அன்னை கஸ்துாரிபா மகளிர் சங்கத்தை சேர்ந்த பெண்கள், கலெக்டர் பவன்குமாரிடம் அளித்த மனு: கோவை டாட்டாபாத்தில் சவுபாக்கிய சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
அன்றாடம் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சிலர் பக்தர்கள் வழிபடுவதை தடுக்கின்றனர். அப்பகுதியில் கடை நடத்தும் நபர்களிடம், மாமுல் கேட்டு மிரட்டுகின்றனர். இது குறித்து விசாரித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.