/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுந்தராபுரத்தில் மீண்டும் 'சிக்னல்' வர வேண்டும்
/
சுந்தராபுரத்தில் மீண்டும் 'சிக்னல்' வர வேண்டும்
ADDED : செப் 01, 2025 10:41 PM
போத்தனூர்; சுந்தராபுரம் சந்திப்பில் சிக்னல் முறையை மீண்டும் கொண்டு வர, மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் துவக்கப்பட்டது.
இது குறித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், அதிகாரிகள் செயல்படுத்திய யூ டர்ன் முறையால், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை; அதிகரித்துள்ளது.
பாதசாரிகளால் சாலையை கடக்க முடியவில்லை. மதுக்கரை மார்க்கெட் செல்லும் பஸ்கள் எல்.ஐ.சி.காலனி, ஹவுசிங் யூனிட் வழியே செல்வதால், இடைப்பட்ட பகுதியிலுள்ள மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சுந்தராபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை நீக்கி, முன்போல் சிக்னலை இயக்க, மக்களிடம் கையெழுத்து பெற்று, கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம், என்றார்.
அதிகாரிகள் களத்தில் இறங்கி நிலைமையை உணர்ந்து, செயல்பட வேண்டும். செய்வார்களா?