/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம்
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம்
ADDED : அக் 07, 2025 01:32 AM

கோவை:கோவையில், கே.எம்.சி.ஹெச்., சார்பில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக, பிங்க் வண்ண விளக்கு ஒளியுடன், ரேஸ்கோர்ஸ் மீடியா டவரில் ஒளிர்ந்தது. கே.எம்.சி.ஹெச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிச்சாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில் கலெக்டர், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், எஸ்.பி., கார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட குறும்பட போட்டி மற்றும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு 'செல்பி பாயின்ட்' மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மாணவர்களின் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், கே.எம்.சி.ஹெச்., மார்பக சிகிச்சை மையத்தின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா மற்றும் பலர் பங்கேற்றனர்.