/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீவனப்பயிர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
/
தீவனப்பயிர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : பிப் 15, 2024 06:45 AM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அஸ்ஸாம் நிறுவனங்கள் இடையே, தீவனப்பயிர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னிலையில், கோ 5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் ரகத்தினை, வணிக ரீதியான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்காக கையொப்பமானது.
கோ 5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் ரகம், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் கீழ் இயங்கும், தீவனப்பயிர் துறை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்த வீரிய ஒட்டு ரகம் கால்நடை விவசாயிகளுக்கு, ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்த வீரிய ஒட்டு ரகம், அதிக தீவன உற்பத்தித்திறன், அகலமான இலைகள், மிருதுவான தண்டுகள், அதிக புரதச்சத்து, விரைவில் தழைத்து வளரக்கூடிய தன்மை உடையது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், பல்கலை சார்பாகவும், பிரான்பந்து தாஸ் குழுமத்தின் சார்பாக பிரான்பந்து தாஸ், ரபிக் அலி நிறுவனத்தின் சார்பாக, முகமது ரபிக் அலி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

