/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டு நுால் விலை வீழ்ச்சியால் பட்டுக்கூடுக்கு விலையில்லை
/
பட்டு நுால் விலை வீழ்ச்சியால் பட்டுக்கூடுக்கு விலையில்லை
பட்டு நுால் விலை வீழ்ச்சியால் பட்டுக்கூடுக்கு விலையில்லை
பட்டு நுால் விலை வீழ்ச்சியால் பட்டுக்கூடுக்கு விலையில்லை
ADDED : மே 19, 2025 11:53 PM
கோவை; வெயில் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது. பட்டு நுால் விலை குறைந்துள்ளதால், பட்டுக்கூடுக்கு விலை குறைந்துள்ளது.
கோவை பாலசுந்தரம் ரோட்டில், பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுகல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்து, விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை பட்டு அங்காடிக்கு மாதம், 25 டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெயில் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமாக, பட்டுக்கூடு உற்பத்தி குறையும் போது, விலை உயர்வது வழக்கம்.
இந்த முறை விலை உயரவில்லை. நேற்று தரமான கூடு ஒரு கிலோ, 570 ரூபாய்க்கும், அடுத்த தரம் 250 ரூபாய்க்கும் விற்பனையானது.
விவசாயிகள் கூறுகையில், 'வெப்பத்தால் பட்டுப்புழுக்கள் இறப்பு அதிகரித்துள்ளது. அதனால் கூடு உற்பத்தி குறைந்துள்ளது. பட்டு நுால் விலை குறைந்து இருப்பதால், கூடுக்கு விலை கிடைக்கவில்லை. கடந்த வாரம் நல்ல விலை இருந்தது. இந்த வாரம் திருப்தியாக இல்லை' என்றனர்.