/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டுக்கூடு உற்பத்தி குறைவால் விலை அதிகரிப்பு சுட்டெரிக்கும் வெயிலுக்கு பட்டுப்புழுக்களும் தப்பவில்லை

ADDED : மார் 06, 2024 09:10 PM

கோவை, : வெயில் அதிகரிப்பால் பட் டுக் கூடு உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
கோவை பாலசுந்தரம் ரோட்டில், பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 800 கிலோ முதல் ஒரு டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பட்டு நுால் உற்பத்தியாளர்கள் இங்கு பட்டுக்கூடுகளை வாங்கி, நெசவுக்கு தேவையான பட்டு நுாலை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, பனிப்பொழிவு அதிகமானதால் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து விலை அதிகரித்தது. ஒரு கிலோ, 510 ரூபாய் வரை விற்பனையானது.
கடந்த மாதம் கிலோ, 380 ரூபாய்க்கு விற்பவையானது. இப்போது வெயில் அதிகரித்து இருப்பதால், விலை அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு கிலோ 465 ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக ஒரு கிலோ 412 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டுக்கூடு விவசாயி வெள்ளியங்கிரி கூறுகையில், ''வெயில் கடுமையாக இருப்பதால் பட்டுப்புழுக்களை காப்பாற்றுவது கடினம். பராமரிப்பு செலவு அதிகமாகும். கூடு உற்பத்தி அதிகரித்து, விலை உயர்ந்தால்தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
உற்பத்தி குறைந்து, விலை அதிகமானால் பயனில்லை. வெயில் காலத்தில் பட்டு நுால் விலை அதிகரிக்கும். ஆனால் இப்போது நுால் விலை உயரவில்லை,'' என்றார்.