/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேது வித்யாலயாவில் வெள்ளி விழா
/
சேது வித்யாலயாவில் வெள்ளி விழா
ADDED : அக் 02, 2025 12:35 AM

கோவை; வேடப்பட்டி, சேது வித்யாலயா உயர்நிலைப்பள்ளி வெள்ளி விழா ஆண்டு மற்றும் நிறுவனர் ஆண்டியப்ப செட்டியாரின் நுாற்றாண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளியின் தாளாளரும், ஆண்டியப்பன் ராமாயி அறக்கட்டளை நிர்வாகியுமான ராமநாதன் பேசுகையில், ''எங்கள் பள்ளியில் ஐந்தாவது வரை ஹிந்தி கூடுதல் பாடமாக எவ்வித கட்டணமும் இன்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
யோகா பயிற்சி, கராத்தேவும் கட்டணமின்றி சொல்லித்தரப்படுகிறது. உலக தரத்திலான கல்வி, மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது,'' என்றார்.
மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர் விழாவில் கலந்துகொண்டனர்.