/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி முகவரியில் சிம்கார்டு; மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்
/
போலி முகவரியில் சிம்கார்டு; மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்
போலி முகவரியில் சிம்கார்டு; மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்
போலி முகவரியில் சிம்கார்டு; மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்
ADDED : ஆக 13, 2025 10:05 PM
கோவை; போலி முகவரி கொடுத்து, சிம்கார்டு வாங்கிய வழக்கில், கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட்கள், கேரளாவை சேர்ந்த ரூபேஷ்,54, மனைவி ஷைனி,52, அனுாப்,37, மற்றும் கண்ணன்,56, வீரமணி,69,ஆகியோர், மே.,2015 ல், கோவை 'கியூ' பிரிவு போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், ைஷனி, கண்ணன், வீரமணி, அனுாப் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில், மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
போலியான முகவரி கொடுத்து, மொபைல் போன் சிம்கார்டு வாங்கியதாக ரூபேஷ் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கேரள சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் ரூபேஷ் அழைத்து வரப்பட்டார்.
கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.