/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றையர் ஓபன் டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் அசத்தல் வெற்றி
/
ஒற்றையர் ஓபன் டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் அசத்தல் வெற்றி
ஒற்றையர் ஓபன் டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் அசத்தல் வெற்றி
ஒற்றையர் ஓபன் டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் அசத்தல் வெற்றி
ADDED : ஆக 05, 2025 11:48 PM

கோவை; கோவை மாவட்ட ஒற்றையர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி, சரவணம்பட்டியில் நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட, 20க்கு மேற்பட்ட மாவட்ட, மாநில வீரர்கள் பங்கேற்றனர்.
'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' சுற்றுகளுக்குபிறகு நடந்த முதல் அரையிறுதியில், வீராங்கனை ஸ்ரீநிவி , 10-12, 11-9, 11-9, 7-11, 11-8 என்ற புள்ளி கணக்கில், வீரர் சொக்கலிங்கத்தை வென்றார்.
இரண்டாவது அரையிறுதியில் வீரர் சங்கர், 11-9, 11-8, 8-11, 11-8 என்ற புள்ளி கணக்கில் வீரர் ஸ்ரீதரை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பரபரப்பான இறுதிப் போட்டியில் வீராங்கனை ஸ்ரீநிவி, 9-11, 12-10, 11-8, 11-7 என்ற புள்ளிகளில் வீரர் சங்கரை வீழ்த்தி, முதல் பரிசை தட்டிச் சென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கங்கள் வழங்கப்பட்டன.