/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; 1.5 லட்சம் ரூபாய் சிக்கியது

ADDED : செப் 20, 2024 09:25 AM

போத்தனுார்: கோவை, வெள்ளலுாரில் உள்ள சிங்காநல்லூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். கணக்கில் வராத, 1.5 லட்சம் ரூபாய் சிக்கியது.
வெள்ளலூரில் செயல்படும் சிங்காநல்லூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் நான்ஸி நித்யா கரோலின் என்பவர் சார்-பதிவாளராக பணிபுரிகிறார். இங்கு, பத்திர எழுத்தர்கள் மூலம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, எஸ்.ஐ., மது விக்ரம் உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்கள். இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.
பத்திர எழுத்தர் மணிகண்டனின் அலுவலக பணியாளர் கீர்த்தி சங்கர் என்பவரிடமிருந்து, ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து, 50 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு, 10:30 மணியை கடந்தும் போலீசாரின் விசாரணை தொடர்ந்தது.
கீர்த்தி சங்கர் சார்-பதிவாளர் அலுவலக ஊழியர்களுக்கு எடுபிடியாக செயல்பட்டு, லஞ்ச தொகையை வாங்கி வைக்கும் வேலையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.