/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டையை பிளக்கும் வெயில்; பழச்சாறு விற்பனை ஜோர்
/
மண்டையை பிளக்கும் வெயில்; பழச்சாறு விற்பனை ஜோர்
ADDED : மார் 01, 2024 12:20 AM
கிணத்துக்கடவு;கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் வாகனங்களை நிறுத்தி இயற்கை பானங்கள் பருக துவங்கியுள்ளனர்.
பொதுமக்கள், வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள, நீர்ச்சத்து நிறைந்த இயற்கை பானங்களை பருகி வருகின்றனர்.
வெயில் தாக்கம் அதிகரிப்பால் கம்பங்கூழ், மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறு போன்றவற்றை பருகி தாகத்தை போக்கி வருகின்றனர். இதனால், ரோட்டோரத்தில் புதிதாக கடைகள் முளைத்துள்ளன.
பழச்சாறு கடைக்காரர்கள் கூறியதாவது:
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதிக படியான மக்கள், கம்பங்கூழ், மோர், பழச்சாறு போன்ற இயற்கை பானங்களை பருகி வருகின்றனர். மற்றும் அதிகளவு பழ வகைகளை வாங்கி செல்கின்றனர்.
இதனால், சிறிய அளவிலான இயற்கை பானங்கள் விற்கும் கடைகளின் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், சத்துகள் நிறைந்த பழ வகைகள், நுங்கு, கூழ் போன்றவைகள் பருகினால் உடல் சோர்வடைவதை கட்டுப்படுத்தலாம்.
இயற்கை பானங்கள், தர்பூசணி, நுங்கு சாப்பிடுவது அதிகரித்து வரும் நிலையில், குளிர்பானங்களை மக்கள் தவிர்த்து வருவது வரவேற்கும் வகையில் உள்ளது.
இவ்வாறு, கூறினர்.

