UPDATED : அக் 30, 2026 06:11 PM
ADDED : அக் 30, 2026 06:06 PM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், 4 நாட்களுக்கு முன்பு வரை, கனமழை பெய்தது. அப்போது, சிறுவாணி மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டில், மழைநீர் பெருக்கெடுத்தது. பல இடங்களிலும் மழைநீர் தேங்கியது. தற்போது, மழைநீர் வற்றியுள்ளது. இருப்பினும், மழைநீரில் அடித்துவரப்பட்ட மணல், சாலை முழுவதும் பரவிக்கிடக்கிறது.
மழைநீர் தேங்கி நின்ற இடங்களில், மணல் திட்டுகள் பரவி கிடக்கிறது. காற்று வீசும்போது, கனரக வாகனங்கள் செல்லும்போது, மணல் தூசிகள் கண்ணில் விழுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மணலில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி தடுமாறி சாலையில் விழுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், சாலையில் உள்ள மணலை அகற்ற, மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
