/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிக சமையல் துறையில் சர்வதேச அளவில் முன்னேற்றம் காணும் எஸ்எம் கார்ப்பரேசன்
/
வணிக சமையல் துறையில் சர்வதேச அளவில் முன்னேற்றம் காணும் எஸ்எம் கார்ப்பரேசன்
வணிக சமையல் துறையில் சர்வதேச அளவில் முன்னேற்றம் காணும் எஸ்எம் கார்ப்பரேசன்
வணிக சமையல் துறையில் சர்வதேச அளவில் முன்னேற்றம் காணும் எஸ்எம் கார்ப்பரேசன்
ADDED : செப் 30, 2025 10:43 PM

கோ வையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் எஸ்எம் கார்ப்பரேஷன், வணிக சமையல் துறையில் தானியங்கி உபகரணங்களை உருவாக்கி, உணவகம் மற்றும் கேட்டரிங் துறையில் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது.
1997---1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில் முதன்முறையாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டில்டிங் வெட் கிரைண்டரை அறிமுகப்படுத்தியது. பின்னர் காஸ்மோஸ் காய்கறி வெட்டும் இயந்திரம், கோதுமை மாவு பிசைய மற்றும் உருளைக்கிழங்கு தோல் உரிக்கும் மெஷின், குழம்பு வகைகள் தயாரிக்க, குக்-வாக், காம்பி ஸ்டீமர் போன்ற உபகரணங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி, உணவு வணிக சமையலில் புரட்சியை ஏற்படுத்தியது.
2009-2015 காலக்கட்டத்தில், நவீன கார்ப்பரேட் அலுவலகம், டெமோ கிச்சன் ஆகியவை நிறுவப்பட்டதோடு, விற்பனை மற்றும் சேவை பிரிவுகள் தனித்தனியாக இயங்கத் தொடங்கின. அதன் பின்னர், 'காஸ்மோஸ் ஜீட்டா ஏஎஸ்' என்றும் புதுமையான காய்கறி வெட்டும் இயந்திரம், இட்லி, சாப்பாடு மற்றும் காய்கறிகள் வேக வைக்க ஸ்டீமர், 'குக்-வாக் பிரைம்' போன்ற புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2020--2024 காலகட்டத்தில், இறைச்சியில் மசாலா சேர்க்கும் 'வேக்கும் மாரினேட்டர், மின்சாரத்தை சேமிக்கும் இண்டக்சண் குக்கிங் உபகரணங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகள் உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம், எஸ் எம் கார்ப்பரேஷன் தனது சர்வதேச நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வரும் எஸ் எம் கார்ப்பரேஷன், இந்தியாவின் முதல் என்.எஸ்.எப்., சான்றிதழ் பெற்ற 'காஸ்மோஸ் குக்-வாக்' தயாரிப்பை வழங்கி, சர்வதேச தரத்தை நிலைநிறுத்தியுள்ளது.
நிர்வாக இயக்குனர் சதிஷ் நாயர் கூறியதாவது:
துல்லியமும் தூய்மையும் சுவையும் காக்கும் வகையில் எங்கள் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவையை தலைமைஇடமாக கொண்டு, 27 ஆண்டுகால அனுபவத்துடன் உலக சந்தையை நோக்கி நாங்கள் முன்னேறுகிறோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, ஆற்றல் சிக்கன தயாரிப்புகளை வடிவமைக்கும் எஸ்எம் கார்ப்பரேஷன், உணவுத் துறையில் திறன், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கில் அடுத்த தலைமுறை சமையல் உபகரணங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.உலகளாவிய உணவுத் துறையில் நம்பிக்கைக்குரிய மற்றும் புதுமை நிறைந்த சமையல் தானியங்கி நிறுவனமாக திகழ்வதே எஸ்எம் கார்ப்பரேஷனின் முக்கிய இலக்காகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.