/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழுகும் நிலையில் இருக்கு சின்ன வெங்காயம்; அரசே விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
/
அழுகும் நிலையில் இருக்கு சின்ன வெங்காயம்; அரசே விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
அழுகும் நிலையில் இருக்கு சின்ன வெங்காயம்; அரசே விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
அழுகும் நிலையில் இருக்கு சின்ன வெங்காயம்; அரசே விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2024 10:51 PM
கோவை ; தொண்டாமுத்துார் சுற்றுவட்டாரத்தில், சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு பட்டறையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இடைத்தரகர்கள் வாயிலாகவே விவசாயிகள் விற்க வேண்டிய நிலை உள்ளது. அதைப்போக்க, அரசே விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
ஆலாந்துறை, தீத்திபாளையம், மாதம்பட்டி, நரசீபுரம் உள்ளிட்ட தொண்டாமுத்துார் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பல ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. ஜூன் மாதத்தில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு, பட்டறையில் இருப்பு வைக்கப்படுகிறது.
போதிய விலை கிடைக்கும் பட்சத்தில், இருப்பு வைத்துள்ள சின்ன வெங்காயத்தை, விவசாயிகள் விற்பனை செய்வர்.
பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நேரடியாக வந்து, விவசாயிகளிடம் சின்ன வெங்காயம் வாங்கி வந்த நிலையில், சில ஆண்டுகளாக, இடைத்தரகர்கள் வாயிலாக விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இடைத்தரகர்கள், இங்கிருக்கும் விவசாயிகள் இடையே, 40 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் வாங்கி, பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல் உட்பட பல பகுதிகளுக்கு அனுப்பி வருவதாகவும், ஒரு கிலோ உற்பத்தி செய்ய 35 முதல் 40 ரூபாய் வரை செலவு ஏற்படும் நிலையில், எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை எனவும், விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது பட்டறையில் வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை அப்படியே விட்டால் அழுகி விடும் சூழலில், இங்கிருக்கும் விவசாயிகளும் வேறு வழியில்லாமல், அசல் கிடைத்தால் போதும் என மனநிலைக்கு வந்து விடுகின்றனர். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கின்றனர்.
பூலுவப்பட்டி விவசாயி பொன்னுசாமி கூறுகையில், ''அறுவடை செய்யப்பட்டு, 15 டன் சின்ன வெங்காயம், பட்டறையில் இருப்பு வைத்துள்ளேன். இடைத்தரகர்கள் ஒரு விலைக்கு வாங்கி, அவர்கள் ஒரு தொகை வைத்து, வியாபாரிகளிடம் விற்கின்றனர். தற்போது மழை பெய்து வருவதால், வெங்காயம் அழுகி விடும் நிலை உள்ளது. எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே, தொண்டாமுத்துார் சுற்றுவட்டார விவசாயிகள் வைத்துள்ள சின்ன வெங்காயத்தை, விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்தால் மிகுந்த உபயோகமாக இருக்கும்,'' என்றார்.