/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்., முன் 'ஸ்மார்ட் சிக்னல்'
/
கே.எம்.சி.எச்., முன் 'ஸ்மார்ட் சிக்னல்'
ADDED : அக் 18, 2024 11:17 PM

கோவை : வேகமாக வளர்ந்து வரும் கோவை நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக, மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனொரு பகுதியாக, மக்கள் கூடும் இடங்களில், ஸ்மார்ட் சிக்னல்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, அவினாசி ரோடு, கே.எம்.சி.எச்., மருத்துவமனை முன் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட, ஸ்மார்ட் சிக்னலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்வில், கே.எம்.சி.எச்., மருத்துவமனையின் செயல் இயக்குனர் அருண் பழனிசாமி பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ''இந்த ஸ்மார்ட் சிக்னலால், மருத்துவமனைக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் எளிதாக சாலையை கடக்க முடியும். தானியங்கி முறையில் பெலிக்கான் சிக்னலை, கூட்டம் அதிகமாக இருந்தால், பொதுமக்களும் உபயோகிக்கலாம்,'' என்றார்.

