/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபட்டில் வந்தது பாம்பு; நடுரோட்டில் பெண் 'ஷாக்'
/
மொபட்டில் வந்தது பாம்பு; நடுரோட்டில் பெண் 'ஷாக்'
ADDED : செப் 23, 2025 11:02 PM

கோவை; கோவை, கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்தவர் மைதீன் பாத்திமா. தினமும் வீட்டில் இருந்து பணிபுரியும் நிறுவனத்துக்கு ஸ்கூட்டரில் சென்று வருகிறார். நேற்று முன் தினம் காலை வழக்கம்போல், தனது மொபட்டில், அலுவலகத்துக்கு புறப்பட்டார்.
உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகில், மொபட்டின் முன் பகுதியில் இருந்து ஒரு சிறிய பாம்பு வெளியே வந்தது. கைப்பிடி அருகே பாம்பு இருப்பதை பார்த்த மைதீன்பாத்திமா, அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தினார்.
அதற்குள் ஸ்கூட்டரின் முன்புற பகுதிக்கு, பாம்பு சென்று விட்டது. அப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் ஸ்கூட்டரின் முன்புற பகுதியை கழற்றி, மறைந்திருந்த குட்டிப் பாம்பை வெளியே எடுத்தனர். அது, நல்ல பாம்பு குட்டி எனத் தெரிந்தது. அதை வனப்பகுதியில் விடுவித்தனர்.