வீட்டில் சிக்கிய மலைப்பாம்பு: மீட்டு வனத்தில் விடுவிப்பு
வீட்டில் சிக்கிய மலைப்பாம்பு: மீட்டு வனத்தில் விடுவிப்பு
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:26 PM

அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: வீட்டில் சிக்கிய மலைப்பாம்பை, வனத்துறையினர் மீட்டு அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டின் மழைநீர் வடிகுழாயில், 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்து சிக்கியது. மேட்டுப்பாளையம் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள், மீட்டு பணியில் ஈடுபட்டனர். குழாயின் குறுகிய பகுதிக்குள் பாம்பு சிக்கியிருந்ததால், மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்டநேரம் போராடி, மலைப்பாம்பு மீட்கப்பட்டு, கல்லாறு அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.
