/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலையிலும் நீடிக்கும் பனி மூட்டம்
/
காலையிலும் நீடிக்கும் பனி மூட்டம்
ADDED : டிச 23, 2024 05:26 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், காலையில் பரவலாக நீடிக்கும் பனி மூட்டம் காரணமாக, வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், கடந்த சில தினங்களாக, பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை, பனிப்பொழிவு காரணமாக, நகர் முழுவதும், பனி மூட்டம் காணப்பட்டது.
பனி மூட்டம் காரணமாக, சாலைகளில் பயணித்த ஓட்டுநர்கள், வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச்சென்றனர். காலை, 8:30 மணி வரை நிலவிய பனிமூட்டம், அதன் பின் வெயில் காரணமாக நீங்கியது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: இரவில், குளிரின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும், காலையில் அதிகரித்தே காணப்படுகிறது. பிரதான ரோடுகளில் பனிமூட்டம் காரணமாக, வாகனங்களை வேகமாக இயக்க முடிவதில்லை.
எதிரே வரும் வாகனங்கள், பாதசாரிகள் சரிவர கண்களுக்கு புலப்படுவதும் கிடையாது. இதனால், வேகத்தை குறைத்து, முகப்பு விளக்கை எரியச் செய்து, வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.