ADDED : ஜூன் 19, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
சரவணம்பட்டி:தடாகம் ரோட்டில் உள்ள கே.வி.எம். மஹாலில் நான்காவது தேசிய சிலம்பப் போட்டி நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எட்டு முதல் 10 வயது பிரிவில் பங்கேற்ற சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ்., அகாடமியின் ஆறாம் வகுப்பு-ஏ வகுப்பு மாணவி கோவர்ஷினி டியா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
எஸ்.என்.எஸ். அகாடமியில் மாணவர்கள் கல்வி, கலை, விளையாட்டு மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வெற்றி பெற்ற மாணவியை அனைவரும் பாராட்டினர்.
