/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 ஊராட்சிகளில் சமூக தணிக்கை துவக்கம்
/
10 ஊராட்சிகளில் சமூக தணிக்கை துவக்கம்
ADDED : டிச 24, 2024 06:59 AM
அன்னுார்; கோவை மாவட்டத்தில், பொகலூர் உள்பட 10 ஊராட்சிகளில், சமூக தணிக்கை நேற்று துவங்கியது. வரும் 28ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கடந்த ஆண்டு, ஏப். 1 முதல், நடப்பு ஆண்டு மார்ச் 31 வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், செய்யப்பட்ட பணிகள் மற்றும் 2016 முதல் 2021ம் ஆண்டு வரை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த, சமூக தணிக்கை, கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு வாரமும், பத்து ஊராட்சிகளில் நடக்கிறது.
நடப்பு வாரத்தில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், 24 வீரபாண்டி ஊராட்சி, அன்னுார் ஒன்றியத்தில், பொகலூர், காரமடை ஒன்றியத்தில் தோலம்பாளையம்,சூலூர் ஒன்றியத்தில், பீடம்பள்ளி, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் செலக்கரிசல் உள்பட 10 ஊராட்சிகளில், நேற்று வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இதில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இன்று வேலை அட்டை, வருகை பதிவேடு ஆய்வு செய்தல், களத்தில் செய்யப்பட்ட பணிகள் அளக்கப்படுகிறது. வரும் 28ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அழைப்பு விடுத்துள்ளது.