/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 ஊராட்சிகளில் இன்று சமூக தணிக்கை துவக்கம்
/
10 ஊராட்சிகளில் இன்று சமூக தணிக்கை துவக்கம்
ADDED : டிச 09, 2024 04:46 AM
கோவில்பாளையம்: கோவை மாவட்டத்தில், அ.மேட்டுப்பாளையம் உட்பட, 10 ஊராட்சிகளில், இன்று (9ம் தேதி) சமூக தணிக்கை துவங்குகிறது.
கடந்த ஆண்டு, ஏப். 1 முதல், நடப்பாண்டு மார்ச் 31 வரை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செய்யப்பட்ட பணிகள் மற்றும் 2016 முதல் 2021ம் ஆண்டு வரை, பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த, சமூக தணிக்கை, கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு வாரமும், 10 ஊராட்சிகளில் நடக்கிறது.
நடப்பு வாரத்தில், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், அத்திப்பாளையம் ஊராட்சி; அன்னூர் ஒன்றியத்தில், அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி; சூலுார் ஒன்றியத்தில், பதுவம்பள்ளி; சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் பூரண்டாம்பாளையம்; மதுக்கரை ஒன்றியத்தில் பாலத்துறை உட்பட 10 ஊராட்சிகளில், இன்று சமூக தணிக்கை துவங்குகிறது. பணி நடந்த இடங்களில் அளவீடு எடுக்கப்படுகிறது.
தொழிலாளர்களின் வேலை அட்டை பரிசோதிக்கப்படுகிறது. இதையடுத்து, வரும் 13ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.