/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை; வீடு வீடாக ஆய்வு செய்ய திட்டம்
/
20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை; வீடு வீடாக ஆய்வு செய்ய திட்டம்
20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை; வீடு வீடாக ஆய்வு செய்ய திட்டம்
20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை; வீடு வீடாக ஆய்வு செய்ய திட்டம்
ADDED : செப் 23, 2024 12:05 AM
அன்னுார்: கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில், இன்று சமூக தணிக்கை துவங்குகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், கடந்த 2023 ஏப்., 1 முதல் 2024 மார்ச் முடிய நடைபெற்ற பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், 2016-17 முதல் 2021-- 22 வரை கட்டப்பட்ட வீடுகள் குறித்து சமூக தணிக்கை செய்யும் பணி செப்., 2ம் தேதி துவங்கியது.
ஒவ்வொரு வாரமும், கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில் சமூக தணிக்கை நடைபெறுகிறது. இந்த வாரம், அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் குன்னத்துார், எஸ். எஸ்.குளம் ஒன்றியத்தில் கள்ளிப்பாளையம், காரமடை ஒன்றியத்தில் இலுப்பநத்தம், தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் தீத்திபாளையம், சூலுார் ஒன்றியத்தில் காடம்பாடி, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஜே. கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில், இன்று சமூக தணிக்கை துவங்குகிறது.
இன்று காலை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், மாலையில் 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் தணிக்கையாளர்கள், ஆவணங்களை ஆய்வு செய்து, பணிகளை நேரில் அளவீடு செய்ய உள்ளனர். தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று வேலை அட்டையை பரிசோதிக்கின்றனர்.
வருகிற 27ம் தேதி காலை 11:00 மணிக்கு, நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கை அறிக்கை வாசிக்கப்படுகிறது.
'பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று, இப்பணிகள் குறித்த தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்,' என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.