தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சூரிய சக்தி மின் திட்டம் 16 ம் தேதி சிறப்பு முகாம்

சூரிய சக்தி மின் திட்டம் 16 ம் தேதி சிறப்பு முகாம்

சூரிய சக்தி மின் திட்டம் 16 ம் தேதி சிறப்பு முகாம்


UPDATED : அக் 13, 2026 06:09 PM

ADDED : அக் 13, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:09 PM ADDED : அக் 13, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்: பிரதம மந்திரி சூரிய சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம், 16 ம்தேதி தென்னம்பாளையத்தில் நடக்கிறது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கோவை தெற்கு மின் பகிர்மான வட்டம், சோமனூர் கோட்டம் சார்பில், பிரதம மந்திரி சூரிய சக்தி (சோலார்)திட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடக்கிறது.

தென்னம்பாளையத்தில் உள்ள தங்கம்மன் மண்டபத்தில், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், சோலார் அமைப்பதின் பயன்கள், வங்கி கடன் பெறுவது, பதிவு செய்வது, அரசுகள் தரும் மானியங்கள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. முகாமில் பங்கேற்று பயன் பெற, மின் வாரியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒரு கே.வி., சோலார் அமைப்பதற்கு, மத்திய அரசு, 35 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு, 5 ஆயிரம் ரூபாயும் மானியமாக அளிக்கிறது. 2 கே.வி.,க்கு, 70 ஆயிரம் ரூபாய் மானியமும், 3 கே.வி.மற்றும் அதற்கு மேல் சோலார் அமைக்க, மத்திய அரசு மானியமாக, 78 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு மானியமாக, 22 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக மின் வாரிய அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us