sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சில வரி செய்திகள்

/

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்


ADDED : அக் 07, 2024 12:49 AM

Google News

ADDED : அக் 07, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உணவு இழப்பு விழிப்புணர்வு


வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், உணவு பதன்செய் பொறியியல் துறை சார்பில், சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், காலநிலை மாற்றத்தைக் கணித்தல் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கான முதலீட்டின் அவசரத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி, வினாடி வினா, துண்டறிக்கை வழங்கல், மீம் உருவாக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி பேரணியை துவக்கி வைத்தார். டீன்கள் ரவிராஜ், மரகதம், பேராசிரியர் பாலகிருஷ்ணன், மாணவர்கள் பங்கேற்றனர்.

மலர்களில் மதிப்புக்கூட்ட பயிற்சி


கோவை வேளாண் பல்கலை, மலரியல் துறை சார்பில், மலர்களில் மதிப்புக் கூட்டுதல் பற்றிய ஒரு நாள் பயிற்சி நடக்கிறது. பல்கலை வளாகத்தில் வரும் 9ம் தேதி, பல வகைப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட மலர் பொருட்கள், பூமாலை, ஜடை பட்டி, நிறமேற்றப்பட்ட மலர்கள், மலர்களைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்த, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. காலை, 10:00 முதல் மாலை 4:30 மணி வரை நடக்கும் பயிற்சிக்கு, ஆயிரம் ரூபாய் கட்டணம். மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும். முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 99654 35081, 99427 66922 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

தேனீ வளர்ப்பு பயிற்சி


பூச்சியியல் துறை சார்பாக, இன்று, தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேனீ இனங்களைக் கண்டறிந்து வளர்த்தல், வளர்க்கும் முறை, தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். காலை 9:00 மணிக்கு பயிற்சி துவங்கும். ரூ.590 கட்டணத்தை நேரில் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

காளான் வளர்க்க பயிற்சி


பயிர் நோயியல் துறை சார்பாக, காளான் வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி இன்று வழங்கப்படுகிறது. காலை 10:00 முதல் 5:00 மணி வரை பயிற்சி நடக்கும். ரூ.590 கட்டணத்தை, நேரில் செலுத்தலாம். சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு, 0422 6611336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அ.தி.மு.க.,வில் இணைந்த மாணவர்கள்


கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில், 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், தங்களை அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர். 'மாணவர்கள் கட்சியிலும், அரசியலிலும் சிறந்து விளங்க வேண்டும்' என, வேலுமணி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us