எரிசக்தி பாதுகாப்பு வாரம்
தேசிய எரிசக்தி பாதுகாப்பு வாரத்தையொட்டி, கோவை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்வுகள், வினாடி வினா, கட்டுரைப் போட்டி, 'ஆற்றல் நிலைத்தன்மை, ஒவ்வொரு வாட் எண்ணிக்கையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு, என, தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கல்லூரி டீன் ரவிராஜ், ஈகோ கிளப் ஒருங்கிணைப்பாளர் ராஜ் கிஷோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
விதை மேம்பாட்டு பயிற்சி
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதியுதவியுடன், வேளாண் பல்கலையின் விதை மையத்தால், 'விதைத் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி' வழங்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய, தரமான விதைகளை உற்பத்தி செய்து வழங்குவது முக்கியமானது என, பயிற்சியில் வலியுறுத்தப்பட்டது. விதை மைய இயக்குனர் உமாராணி, தாவர மூலக்கூறு மற்றும் உயிர் தொழில்நுட்ப மைய இயக்குனர் செந்தில், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர் மனோன்மணி மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு
வேளாண் பல்கலை, உணவு பதன் செய் பொறியியல் துறை சார்பில், 'ஆஸ்திரேலியாவில் உணவு பதப்படுத்துதலில் கல்விசார் மற்றும் வேலைவாய்ப்புகள்' என்ற, சிறப்பு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா மெல்போர்ன் கோல்ஸ் குழும செயல்பாட்டுத் தலைவர் மோகன்ராஜ் சிறப்புரை வழங்கினார். உணவுப்பதப்படுத்தும் தொழில்சார்ந்த திறனை எவ்வாறு அதிகரிப்பது, ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகள், கல்வி சார் வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது. டீன் ரவிராஜ், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

