தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தந்தையை கொன்ற மகன் கைது

 தந்தையை கொன்ற மகன் கைது

 தந்தையை கொன்ற மகன் கைது


ADDED : மார் 03, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னுார்: தந்தையை கல்லால் தாக்கிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், அன்னுார் அருகே ஒன்னக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 61. இவரது மகன் ராஜசேகர், 36. எலக்ட்ரீசியன்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதில் உயர் நீதிமன்றம் தந்தைக்கு மாதாந்திர செலவுத் தொகை 5000 தரும்படி மகனுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மகன் தரவில்லை. இதையடுத்து விஸ்வநாதன் கோர்ட் அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து நேற்று முன்தினம் தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்த தந்தையின் தலை மீது மகன் கல்லை போட்டு கொலை செய்தார்.

அன்னுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று மதியம் அன்னுார் ஓதிமலை சாலையில் ராஜசேகர் பிடிபட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வாக்குமூலம் பெற்று அன்னுார் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us