/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாமியார் மீது தாக்குதல்: மருமகன் சிறையிலடைப்பு

UPDATED : டிச 24, 2025 07:14 AM
ADDED : டிச 24, 2025 05:15 AM

ரத்தினபுரி: ரத்தினபுரி தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் கீதா, 46; டெய்லரிங் பணி செய்து வருகிறார். இவரது மகள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த காட்சன், 27 என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
கீதா உள்ளிட்ட குடும்பத்தினர் அவருடன் பேசுவதை நிறுத்தினர். கடந்த சில மாதங்களாக கீதா அவரது மகளுடன் பேசி வந்தார். அப்போது காட்சன் மதுபோதையில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கீதாவிடம் தெரிவித்தார்.
அவரை கூட்டி வந்த கீதா, கேரளாவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதையறிந்த காட்சன், நேற்று முன்தினம் வீட்டுக்குள் புகுந்து, கீதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதோடு, வீட்டில் இருந்த பீரோ, டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினார்.
கீதா அளித்த புகாரின்படி, ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து, காட்சனை சிறையில் அடைத்தனர்.