ADDED : செப் 26, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
கோவை: வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால், பள்ளிகளில் முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்த தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் படி, ஒவ்வொரு தீயணைப்பு நிலைய எல்லைகளிலும் வாரம் இரு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு சென்று மின்பராமரிப்பு, சேதமடைந்த கட்டடங்கள் குறித்து கண்காணிப்பதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தவுள்ளனர்.
இடி, மழை நேரங்களில் என்ன செய்யவேண்டும், தண்ணீர் தேங்கிய இடங்களில் பாதுகாப்பாக செல்லுதல், அறுந்த மின்கம்பிகள் போன்றவை குறித்து எச்சரிக்கின்றனர்.
