/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்காசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப்; 14 தங்க பதக்கம் வென்ற கோவை அணியினர்

ADDED : ஜன 16, 2025 11:44 PM
கோவை; தெற்காசிய மூத்தோர் தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை அணியினர், 14 தங்கம் வென்று தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், மங்களூரில் முதலாவது தெற்காசிய மூத்தோர் தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது. இதில், தமிழ்நாடு அணிக்காக கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், 91 வீரர்கள், 52 வீராங்கனைகள் என, 143 பேர் பங்கேற்றனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடை போட்டி, ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அணி சார்பில் விளையாடிய கோவை அணியினர் ஆண்கள் பிரிவில், 9 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் வென்றனர்.
பெண்கள் பிரிவில் ஐந்து தங்கம், 17 வெள்ளி, 15 வெண்கலம் என, மொத்தம், 14 தங்கம், 29 வெள்ளி, 32 வெண்கலம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 30 முதல், 95 வயது வரையிலானவர்கள் இப்போட்டியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.