/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள்; கூட்டத்தைப் பொறுத்து வழித்தடம் மாறும்
/
கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள்; கூட்டத்தைப் பொறுத்து வழித்தடம் மாறும்
கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள்; கூட்டத்தைப் பொறுத்து வழித்தடம் மாறும்
கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள்; கூட்டத்தைப் பொறுத்து வழித்தடம் மாறும்
ADDED : டிச 11, 2024 09:45 PM

பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, பயணியர் கூட்டத்தைப் பொறுத்து, சிறப்பு பஸ்கள் வழித்தடம் மாறி இயக்கப்படவுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி வேதபாராயணத்துடன் துவங்கியது. இக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிேஷகம் நடத்தப்படவுள்ள நிலையில், விழாவை சிறப்பிக்கும் வகையில், பக்தர்களின் வசதி வேண்டியும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று, காலை, 9:15 மணிக்கு, மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 3 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவர் என்பதால், பொள்ளாச்சி பணிமனைகளில் இருந்து, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, மதுரை, தேனி, பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேரடியாக மாசாணியம்மன் கோவிலுக்கு, 25 சிறப்பு பஸ்களும், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நேரடியாக மாசாணியம்மன் கோவிலுக்கு, 25 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. அனைத்து பஸ்களும் பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் வழியாக கோவிலுக்கு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து சிறப்பு பஸ்களும், பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும். அதன்படி, அம்பராம்பாளையம் வழியாக ஆனைமலை கோவிலுக்கு இயக்கப்படும் பஸ்கள், மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்ப இயக்கப்படும்.
அதேநேரம், நெரிசல் அதிகரிப்பது கண்டறியப்பட்டால், நா.மூ.சுங்கம் வழியாக பொள்ளாச்சிக்கு இயக்கவும், நேரடியாக அந்தந்த ஊர் நோக்கி செல்லவும் அனுமதிக்கப்படும். அதேபோல, கூட்டத்தைப் பொறுத்து, 'ஹால்ட்' பஸ்களை, கோவிலுக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து, மாசாணியம்மன் கோவிலுக்கு, காலை, 5:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை இயக்கப்படும் பஸ்களில் 15 ரூபாய்; இரவு, 10:00 மணி முதல் காலை, 5:00 மணி வரை இயக்கப்படும் பஸ்களில் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.