ADDED : செப் 18, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: அனைத்து ரேஷன் கடைகளிலும், நாளை, 19ம் தேதி இ.கே. ஒய்.சி., சிறப்பு முகாம் நடக்கிறது.
முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், இ.கே.ஒய்.சி., பதிவு, 100 சதவீதம் முடிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 2023 முதல் இப்பணி நடக்கிறது. இ.கே.ஒய்.சி., பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் சிறப்பு முகாமில், ரேஷன் கடைகளில் விரல் ரேகை, கண் கருவிழி பதிவு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
