/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்
/
தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்
தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்
தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்
ADDED : ஜன 02, 2025 05:46 AM
பெ.நா.பாளையம்; தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தாமல் விடப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கிறது.
இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது
மாநிலம் முழுவதும் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம், 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. காசநோய், கல்லீரல் தொற்று, புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரணஜன்னி, தொண்டை அடைப்பான், இன்புளுயன்சா, நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் ஆண்டுதோறும், 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உட்பட, 11 ஆயிரம் இடங்களில் தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
முதல் தவணைக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவது இல்லை. இதன் காரணமாக, 100 சதவீதம் தடுப்பூசி இலக்கு அனைத்து இடங்களிலும் எட்ட முடியாமல் போகிறது. இதையடுத்து இதை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் தகுதி உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாமை பொது சுகாதார துறை நடத்தி வருகிறது. இதில், நிமோனியா, மூளை காய்ச்சல், தொண்டை வீக்கம் உள்ளிட்ட, 5 வகையான நோய்களிலிருந்து குழந்தையை பாதுகாக்க பென்டா வேலண்ட் தடுப்பூசி பிரதானமாக செலுத்தப்படுகிறது. இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில்,'குழந்தை பிறந்து, 4, 10, 14 வாரங்களில் பென்டா வேலண்ட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
உரிய தவணையில் தடுப்பூசி செலுத்த தவறியவர்களுக்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கடந்த டிச., 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
மேலும், பென்டாவேலண்ட் தடுப்பூசி மட்டுமின்றி, ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட மற்ற தடுப்பு ஊசிகள் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும்' என்றனர்.