ADDED : செப் 03, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
கோவை: மசக்காளிபாளையம் மணி மஹாலில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. 240 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
கலெக்டர் பவன்குமார் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆதார் திருத்தம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு, இ-சேவை மையம் மூலம் ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டன.
மாவட்ட முன்னோடி வங்கி, சமூக நலத்துறை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாற்றுத்திறனாளிகள் பார்வையிட்டு, அரசு நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.
